அறந்தாங்கி அருகே ஊர்வணியில் ஜேசிஐ மற்றும் டி1234 பவுண்டேசன் இணைந்து 1234 பனை விதைகள் நடவு!ஜேசிஐ அறந்தாங்கி சூப்பர் கிங்ஸ் மற்றும் டி1234 பவுண்டேசன் இணைந்து 1234 பனை விதைகள் நடும் விழா ஊர்வணி கிராமத்தில் நடைபெற்றது.

டி1234 பவுண்டேஷன் அறந்தாங்கி தொகுதி ஒருங்கிணைப்பாளர் வெங்கட்குமார் தலைமையில், ஊர்வணி ஊராட்சி மன்றத்தலைவர் ஏகாம்பாள் சந்திரசேகரன் முன்னிலையில், ஜேசிஐ ஆண்டோ பிரவின் அனைவரையும் வரவேற்றார். 

இயற்கை இந்தியா தலைவர் போசம்பட்டி சின்னையா நடேசன் பனைமரத்தின் நன்மைகளை பொதுமக்களிடம் விளக்கிப் பேசி இயற்கை காப்போம் உறுதிமொழியை முன்மொழிந்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைவர் வரதராஜன் 1234 பனைவிதைகள் நடவை துவங்கி வைத்தார்.  
இயற்கை நேசன்கள் பிரகாஷ், ரியாஸ் அகமது, பட்டுக்கோட்டை விதைப்பந்து தலைவர் சிதம்பரம், அறந்தாங்கி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார்,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மலையப்பன், இணை செயலாளர் முனைவர் முபாரக் அலி மற்றும் ஊரக வேலை பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஊர்வணி ஊராட்சி துணைத் தலைவர் தினகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments