அறந்தாங்கி மருந்துவமனையை மாவட்ட பொது மருத்துவமனையாக அறிவித்த முதல்வர் மு.க,ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறி மஜக தீர்மானம்!



அறந்தாங்கி அறிஞர் அண்ணா மருந்துவமனையை மாவட்ட பொது மருத்துவமனையாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு  நன்றி கூறி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாக குழு ஒற்றை தீர்மானம் நிறைவேற்றியது.

மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி தலைமையில் நடைபெற்றது. விவசாய அணி மாநில துணை  செயலாளர்  சேக் இஸ்மாயில் முன்னிலையில் மாவட்ட துணைசெயலாளர் ஒளி முகம்மது அனைவரையும் வரவேற்றார். 

மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அறந்தாங்கி மருத்துவமனையை மாவட்ட பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறும் ஒற்றை தீர்மானத்தை விளக்கி முன்மொழிந்தார். மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர்  நாகூர்கனி, கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இறுதியில் மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது நன்றி கூறினார்.

தீர்மானம் - 25ம் தேதி தமிழக அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் தாலுக்கா மருத்துவமனைகளாக இருக்கும் 19 மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதல் இடத்தில் அறந்தாங்கி மருத்துவமனை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அறிவிக்கப்பட்ட 19 மருத்துவமனைகளிலும் உடனடியாக உள்கட்டமைப்பு, நவீன உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், மருத்துவ கூடங்கள், கூடுதல் கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்தும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் ஏற்படுத்த வேண்டும் என  இந்த அரசு ஆணையில் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது.  

திருமயம், ஆலங்குடி, பேராவூரணி, மணமேல்குடி, ஆவுடையார் கோவில், அறந்தாங்கி ஆகிய  பின் தங்கிய பகுதி மக்களின் நலன் கருதி அறந்தாங்கி  அறிஞர் அண்ணா  மருத்துவமனையை  மாவட்ட பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு செய்த தமிழக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாகவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாகவும் நன்றி தெரிவித்து ஒற்றை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments