அறந்தாங்கி டிஎஸ்பியிடம் போதைப் பொருள் விழிப்புணர்வு புகார் மனு..
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP சார்பில் அறந்தாங்கி டிஎஸ்பியிடம் போதைப் பொருள் விழிப்புணர்வு புகார் மனு வழங்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்பாடுகளுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சியின் இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP ) சார்பில் கடந்த அக்டோபர் 02 முதல் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு வடிவங்களிலான பரப்புரை அக்டோபர் 12 அன்று வாணியம்பாடியில் நிறைவடைந்தது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் கடந்த சனிக்கிழமை விழிபுணர்வு முழக்கமிட்டு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வினியோகம் செய்ததை தொடர்ந்து மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ் தலைமையில்  அறந்தாங்கி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் அவர்களை சந்தித்து போதைதரும் அனைத்து வகையான பொருட்களையும் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

உடன் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, விவசாயிகள் அணி மாநில துணை செயலாளர் ஷேக் இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் சாஜிதீன், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி,  இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments