நைனா முகம்மது கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா




நைனா முகம்மது கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நைனா முகம்மது அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.நைனா நைனா மற்றும் கே.நைனா முகம்மது முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மற்றும் புதுக்கோட்டை மாட்சிமை தாங்கிய மாமன்னர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.திருச்செல்வம் பேசுகையில் எதிர்கால இந்தியா வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியைப் போல நாம் மற்றவர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என சிறப்புரையாற்றி  96 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். கல்லூரியின் தாளாளர் முகமது பாரூக் மாணவிகளுக்கு வாழ்த்துகள் கூறி நெறி உரையாற்றினார். 
இந்நிகழ்ச்சிக்கு மேற்பனைக்காடு அப்துல் நாசர், அப்துல் பாரி, அஜ்மீர்,, கிரஸண்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியின் இயக்குநர் முகமது அசாருதீன் மற்றும் நைனா முகம்மது கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை துறைத்தலைவர் முனைவர் மணிகண்டன், ஆங்கிலத்தலைவர் குமரன், வணிகவியல் துறைத்தலைவர் புவியரசு, இயற்பியல் துறைத்தலைவர் அகிலா, கணித துறைத்தவைர் பெஞ்சமின் பிராங்ளின்,  வேதியியல் துறைத்தலைவர் வானதி, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறைத்தலைவர் தமிழ்இலக்கியா மற்றும் அனைத்து துறை உதவி பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
 இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ராமநாதன், கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ராஜாசுரேஷ் மற்றும் மேலாளர் மாரிச்சாமி இந்நிகழ்ச்சியினை தமிழ்த் துறை பேராசிரியை செய்தனர். வனிதா மற்றும் இயற்பியல் துறை பேராசிரியை பாரதிச் செல்வி தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அசோக்ராணி வரவேற்புரையாற்றினார். இறுதியாக கணினி அறிவியல் துறைத் தலைவர் ஈஸ்வரி நன்றியுரையாற்றினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments