அரசர்குளம் அருகே அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் சாலையில் புதுரோடு ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளநீர்
அரசர்குளம் அருகே அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் சாலையில்  புதுரோடுரயில்வேசுரங்கப்பாதையில் வெள்ளநீர்

மீண்டும் ஒரு புதுக்கோட்டை  சம்பவம் நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

இன்று காலை திருப்பூரிலிருந்து_ சுப்பிரமணியபுரம் சென்ற  ஆம்னி கார் வாகனம் புதுரோடு அருகே உள்ள ரயில்வே சுரங்கபாதை வெள்ளத்தில் சிக்கி பழுதாகி மாட்டிக்கொண்டது.

நல்ல வேளையாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.  அந்த வாகனத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 5 பேர் பயணம் செய்தனர்.

நல்லவேளையாக அருகில் உள்ளவர்கள் உதவி செய்ய வாகனம் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

சுரங்கப் பாதை அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தாலும் , முறையான அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை.

பெரும்பாலான வெளியூரிலிருந்து வரும் சிறிய ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் சுரங்கப்பாதை வழியாகவே சென்று வெள்ளத்தில் மாட்டி கொள்கிறது , குறிப்பாக இரவு நேரங்களில் போதிய வெளிச்சயின்மை  காரணமாகவும். (கனமழையின் போது சுரங்கப்பாதையில் மழைநீர் வடியாமல் வெள்ளம்போல் கிடப்பதாலும் .)

எனவே சுரங்கப் பாதையில் உள்ள வெள்ள நீரை உடனடியாக மோட்டார் வைத்து வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன மழை பெய்யும் நேரங்களில் வெள்ள நீர் முழுமையாக வடியும் வகையில் வடிகால் கட்டமைப்பை சரிப்படுத்த வேண்டும்.

முறையான தகவல் பலகை இரு புறமும் வைக்கப்படவேண்டும். புதிய, வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில்.

சுரங்கப் பாதை முழுவதும் விளக்குகள் , சேஃப்டி  ரெப்லெக்டர் அமைக்கப்பட வேண்டும் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக.

குறிப்பு:
கடந்த செப்டம்பர் 18 , புதுக்கோட்டை அருகே உள்ள ரயில்வே சுரங்கபாதையில் (மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்) காரில் சென்ற பெண் மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. என்ற துயர செய்தி கேள்விபட்டிருப்போம்.

அதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments