கோட்டைப்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ.கடசியின் போராட்டம் வாபஸ்
கோட்டைப்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு போதுமான மருத்துவர்கள் மற்றும் போது மான அளவு செவிலியர்கள் இல்லை என்று கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதனடிப்படையில் நேற்று மணமேல்குடி தாசில்தார் அலு வலகத்தில் தாசில்தார் ராஜா தலைமையில், சமாதான கூட் டம் நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவ அலுவலர் செந்தில் ராம், சுகாதாரத்துறை ஆய்வாளர் சீனி முகம்மது, கோட்டைப் பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் வினோத், கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலந்து கொண்டனர். கூட் டத்தில் ஒரு மாதத்திற்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்கா லிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments