வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதி - தமிழக அரசு




வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களை திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

அதன்படி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
மழலையர் நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
அனைத்துவிதமான கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது
தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
அரசியல் விழாக்கள், சமுதாய கலாச்சார நிகழ்வுகளுக்கான தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments