புதுக்கோட்டை வழியாக செல்லும் செகந்திராபாத் (ஹைதராபாத்) - ராமேஸ்வரம் சிறப்பு இரயில் மீண்டும் இயக்கம்.
புதுக்கோட்டை வழியாக செல்லும் செகந்திராபாத்  (ஹைதராபாத்) - ராமேஸ்வரம் சிறப்பு இரயில் மீண்டும் இயக்கம்.

கோவிட் முன்பு இயங்கி வந்த சிறப்பு இரயில் தற்போது மீண்டும் இயக்கம்.

அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.  

தெலுங்கானா மாநில செகந்திராபாத் - ராமேஸ்வரம் இடையே விரைவில் வாராந்திர சிறப்பு ரயில் நம் மெயின் லைன் வழியாக இயக்கப்பட இருக்கிறது. குண்டூர், கூடுர், திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக இயக்கப்பட இருக்கிறது. 

செகந்திராபாத்தில் செவ்வாய் கிழமைகளில் இரவு 9.25 இக்கு புறப்பட்டு வியாழன் அதிகாலை 3.10 இக்கு ராமேஸ்வரம் சென்று அடையும்.

பிறகு வியாழன் இரவு 11.55 இக்கு ராமேஸ்வரத்தில் புறப்பட்டு சனி கிழமை காலை 7.10 இக்கு செகந்திராபாத் சென்றடையும். 

இந்த வண்டி ராமேஸ்வரம் - விழுப்புரம் இடையே Shraddha Sethu வண்டியின் நேரத்திலேயே செல்ல இருக்கிறது.  மற்ற விவரங்கள் இப்பதிவின் இணைப்பு படத்தில் காணலாம்.


இம்மாதம் 19 ஆம் தேதியில் செக்கந்தராபாத் தில்  இருந்து இந்த வண்டிகள்  துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மக்களுக்கு திருப்பதி செல்ல இன்னொரு நேரடி ரயில் கிடைத்திருக்கிறது. இந்த வண்டிகளை சிறப்பாக பயன்படுத்தி விரைவில் இதை நிரந்தர வண்டியாக மாற்றுவோம்.

வரும் 19/10/21 முதல் 
07685/ செகந்திரபாத்-ராமேஸ்வரம் வழி புதுக்கோட்டை வாராந்திர ரயில்
➦செகந்திராபாத் திலிருந்து புறப்படும் நேரம்- 09:25 PM (செவ்வாய் இரவு) 
➤திருப்பதி- 10:00/10:05 AM (புதன் காலை)
➤காட்பாடி - 12:05/ 12:10 PM (புதன்)
➤திருவண்ணாமலை- 01:50/ 01:52 PM(புதன்)
➤புதுக்கோட்டை - 10:43/ 10:45PM (புதன்)
➥ராமேஸ்வரம்- 03:10 AM(வியாழன் அதிகாலை) 

வரும் 21/10/21 முதல் 
07686/ ராமேஸ்வரம் - செகந்திரபாத் வழி புதுக்கோட்டை வாராந்திர ரயில்
➦ராமேஸ்வரதிலிருந்து புறப்படும் நேரம்- 11:55 AM(வியாழன்) 
➤புதுக்கோட்டை - 03:38/03:40 AM (வெள்ளி அதிகாலை)
➤திருவண்ணாமலை- 11:18/ 11:20 AM(வெள்ளி)
➤காட்பாடி - 01:45/ 01:50 PM (வெள்ளி)
➤திருப்பதி- 05:05/05:10 PM (வெள்ளி மாலை)
➥செகந்திராபாத் திலிருந்து செல்லும் நேரம்-07:10 AM(சனி காலை) 

மேலும் இந்த ரயில் ராமேஸ்வரம், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பத்திரியபுலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, குடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிர்யலகுடா,நல்கொண்டா, செகந்திராபாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

புதுக்கோட்டையிலிருந்து செகந்திராபாத், திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் ஒரே நேரடி ரயில் சேவை இதுவாகும் என்பதால் இந்த ரயிலை புதுக்கோட்டை மக்கள் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்தவேண்டும். 

இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments