ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான கலா உத்சவ் போட்டிகள் கல்வி மாவட்ட அளவில் அக்டோபர் 28-ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக அனைத்து வகைப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம் மற்றும் காண்கலை எனும் நான்கு பெருந்தலைப்புகளில் கலா உத்சவ் போட்டிகள் 2015-2016 ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்வியாண்டிலும் 2021-2022 மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்டங்களின் வசதிற்கேற்ப நேரடியாக நடத்தி மாணவர்களை தேர்ந்தெடுத்தெடுத்துக் கொள்ளலாம் என மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்கள்.கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கலா உத்சவ் போட்டிகள் மாணவ,மாணவியர் தம் தனித்திறனை மதிப்பிடும் நோக்கில் தனிநபர் நிகழ்வுகளாக (solo) நடத்தப்படும்.
கலா உத்சவ் போட்டிகள் வாய்ப்பாட்டு இசை- செவ்வியல் (ஹிந்துஸ்தானி/ கர்னாடிக்), வாய்ப்பாட்டிசை- பாரம்பரிய நாட்டுப்புற வகை (ஏதேனும் வட்டாரம் சார்ந்த அல்லது ஏதேனும் பணி சார்ந்தது), கருவி இசை- சேவை வியல் (ஹிந்துஸ்தானி/ கர்னாடிக்), கருவி இசை- பாரம்பரிய நாட்டுப்புறவகை (ஏதேனும் இந்திய பாரம்பரிய இசைக் கருவி), நடனம்- செவ்வியல் (செவ்வியல் வடிவம்), நடனம் (பாரம்பரிய நாட்டுப்புற வகை), காண்கலை- இருபரிமாணம்- (கோட்டு ஓவியம், வண்ண ஓவியம், அச்சு ஓவியம்) , காண்கலை - மூன்று பரிமாணம் (சிற்பம்), உள்ளூர் தொன்மை பொம்மைகள் விளையாட்டுகள் என 9 பிரிவுகளில் நடைபெறும்.
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு மாணவர்,ஒரு மாணவி மட்டுமே பங்கு பெற முடியும்.போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக்பள்ளி,சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கு பெறலாம்.
எனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவியர்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28 ஆம் தேதி கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் கலா உத்சவ் போட்டியில் கலந்து கொண்டு தங்களது கலைத்திறனை வெளிக்காட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.