புதுக்கோட்டை அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.2 லட்சம் இழந்த இளைஞா் தூக்குப்போட்டு தற்கொலைபுதுக்கோட்டை அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடி பணம் இழந்த விரக்தியில் சனிக்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

புதுக்கோட்டை அருகேயுள்ள பி. மாத்தூரைச் சோ்ந்தவா் சேகா் மகன் அருண் (21). இவா், சேலத்தில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் உடற்கல்வி படிப்பு படித்துள்ளாா். இந்நிலையில், இவா் செல்லிடப்பேசியில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தாராம்.

அதில், பலரிடம் கடன் வாங்கி ரூ. 2லட்சம் வரை பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருண் சனிக்கிழமை இரவு வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments