திருத்துறைப்பூண்டி-காரைக்குடி வழித்தடத்தில் விரைவில் முழு ரெயில் சேவை நடவடிக்கை எடுத்த மு.க.ஸ்டாலினுக்கு, தஞ்சை எம்.பி. பழனிமாணிக்கம் நன்றி






திருத்துறைப்பூண்டி- காரைக்குடி வழித்தடத் தில் விரைவில் முழு ரெயில் சேவை இயக்க நடவடிக்கை மேற் கொண்ட முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலினுக்கு, தஞ்சை தொகுதி எம். பி.யான எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் நன்றி தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி-காரைக்குடி

திருவாரூரில் இருந்து திருத் துறைப்பூண்டி வழியான காரைக்குடி. இடையேயான ரெயில் பாதை பாரம்பரிய மான ரெயில்பாதை ஆகும். இந்த ரெயில்பாதை அமைக் கப்பட்டு 149 ஆண்டுகள் ‌ஆகிறது. மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்ததைஅகல ரெயில்பாதையாக மாற்ற வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்த பாதை அகலரெயில்பா தையாக மாற்றப்பட்டது.

அதன் பின்னர் ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த வழித்தடத்தில் டெமு ரெயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் முழு ரெயில்சேவையை தொடங்க வேண்டும். மேலும் 72 இடங்களர் ஆகியோருக்கு, தஞ்சைகளில் கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும்.

விரைவில் ரெயில் சேவை

இந்த வழித்தடத்தில் முன்பு‌ இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும் என்று பொதுமக் கள் தொடர்ந்து வலியுறுத்திய தோடு, பல்வேறு போராட் டங்களிலும் ஈடுபட்டு வந்த னர்.இந்த நிலையில் திருத்து றைப்பூண்டி-காரைக்குடி வழிடத்தடத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் விரைவில் முழு ரெயில் சேவை தொடங்கப் பட உள்ளது. இது தொடர் பாக வருகிற 22-ந்தேதி (வெள் ளிக்கிழமை) திருச்சியில் நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன், தென்ன ரெயில்வே பொது மேலாளர் ஆலோசனை நடத் துகிறார். அதன் பின்னர் ரெயில்கள் இயக்கப்படும்.

பழனிமாணிக்கம் எம்.பி.நன்றி

 இந்த வழித்தடத்தில் ரெயில் களை இயக்க நடவடிக்கைமேற் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தென் னக ரெயில்வே பொது மேலா நாடாளுமன்ற தொகுதி மக்க 'ளின் சார்பில் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி. நன்றியை தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments