புதுக்கோட்டை வழியாக செல்லும் கன்னியாகுமரி - புதுச்சேரி ரயிலை தினசரி இயக்க வேண்டும் கொல்லம் வரை நீட்டிப்பு செய்து பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை




புதுக்கோட்டை  வழியாக செல்லும்  கன்னியாகுமரி - புதுச்சேரி ரயிலை தினசரி இயக்க வேண்டும் கொல்லம் வரை நீட்டிப்பு செய்து பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

 கன்னியாகுமரி - புதுச் சேரி வாராந்திர ரயிலை, கொல்லம் வரை நீட்டிப்பு செய்து, தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டம் உள் பட தென் மாவட்டங்க ளில் இருந்து புனிதஸ்தல மான வேளாங்கண்ணி ஆலயத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகிறார்கள். கன்னியாகுமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட் டங்களை சேர்ந்தவர்கள் பயனடையும் வகையில், திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங் கண்ணிக்கு. நாகர்கோவில், மதுரை, திருச்சி வழயாக செல்லும் வகையில் நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

குறிப்பாக கேரள மாநிலம் புனலூரிலிருந்து திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக மதுரைக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ்‌ ரயிலை, திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.

இதே போல் திருநெல் வேலியில் இருந்து, மதுரை வழியாக‌ ஈரோடுக்கு‌ பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் மதுரையில் உள்ள உயர்நீதிமன் றத்துக்கு செல்ல வசதியாக உள்ளது.

குமரி மாவட்டத்திவிருந்து அதிகபடியான மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மதுரையில் உள்ள உயர்நீதிமன்றத்துக்குவழக்குகள் நிமித்தமாக தினசரி சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் பயணிகளுக்கு மதுரைக்கு அதிகாலையில் புறப்பட்டு சென்று தங்கள் பணியை முடித்து விட்டு அதே நாள் திரும்ப வசதியாக ரயில் வசதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. எனவே 
திருநெல்வேலியிருந்து ஈரோடுக்கு இயக்கப்பட்டு வரும் பகல் நேர ரயிலை திருவனந்தபுரம் கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து, தாம்பரத்துக்கு வாரத்துக்கு மூன்று நாள் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் சென்னைக்கு அதிகாலை 4.10 மணிக்கு சென்று விடு கின்றது. தற்போது குழித் துறை மற்றும் இரணியல் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி ரயில் கால தாமதமாகவே சென்னை செல்கின்றது.

ஆகவே நாகர்கோவில் தாம்பரம் ரயிலை கொச் சுவேலி வரை நீட்டிப்பு செய்து தினசரி ரயிலாக
மாற்றம் செய்து இயக்க வேண்டும். இவ்வாறு நீட் டிப்பு செய்து இயக்கும் போதுநாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிலவும் இட நெருக்கடியும் வெகுவாக குறைய வாய்ப்பு உண்டு என பயணிகள் சங்கத்தி னர் கூறி உள்ளனர்.

நாகர்கோவிலிருந்து கோவைக்கு இயக்கப் பட்டு வரும் இரவுநேர ரயிலின் பெட்டிகளை வைத்து தான் நாகர்கோவில் - கொல்லம் பகல் நேர ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.இந்த இரண்டு ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக கொல்லம் கோயம்பத்தூர் என்று
இயக்க வேண்டும்.

கன்னியாகுமரியிலிருந்து புதுச்சேரிக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் வாராந்திரரயிலின் வருவாய் அதிகரிக்க, கொல்லம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு நீட்டிப்பு செய் யும் போது குமரி மேற்கு மாவட்ட பகுதிகளை சேர்ந்த பயணிகள் மூலம், இந்த ரயிலின் வருவாய் அதிகரிக்கும்.

இவ்வாறு அதிகரித் தால் இந்த ரயிலை தின சரி ரயிலாக மாற்ற முடி யும் என்றும் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ள னர். இது தொடர்பாக குமரி மாவட்ட ரயில் பய ணிகள் சங்கத்தின் சார் பில், ரயில்வே துறைக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments