அக்.4 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் வழங்கப்படும்: அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு


வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "மார்ச் 2021, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண்
சான்றிதழ்களை அனைத்து பள்ளி மாணவர்களும் 04.10.2021 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதேபோல், மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை புரியும் தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக, 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவர்களின் பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு நடைமுறை தேர்வின் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண் வழங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வரும் 4ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments