அறந்தாங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் சிக்கியது

    
அறந்தாங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில்லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அக்ரஹாரம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக முத்துலெட்சுமி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீரென சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை செய்தனர். சோதனையின் போது கணக்கில் வராத பணம் சுமார் ரூ.40 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கணக்கில் வராத பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளரிடம் விசாரணை செய்தனர். அதற்கான கணக்குகளை காட்டுவதாக கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு மேலாகியும் சரியான கணக்கு காட்டாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments