முத்துக்குடாவில் இன்று 02/10/2021 சனிக்கிழமை நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 2.10.2021 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் முத்துக்குடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி. ரா.சீதாலெட்சுமி MSc,.BEd., தலைமையிலும், திருமதி.பிரியாகுப்பராஜா ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி.கமர்நிஷா அபுதாஹீர் அவர்கள், திரு.பெ.ரமேஷ் அவர்கள், மு.உதயகுமார் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
உறுப்பினர்கள்:
2.சித்திநிஜாமியா, 3.அபுதாஹீர் 4.மும்தாஜ் பேகம், 5.ரஜயு நிஜா, 6.பெனாசீர் பேகம், 7.சாதிக் பாட்ஷா, 8.அன்வர் பாட்ஷா, 9.மல்லிகா, 10.சிங்காரி, 11.லெத்திப், 12.பிரேமா
யா.ஸ்டெல்லா, ஊராட்சி செயலர்.
அதுசமயம் அந்த கிராம சபை கூட்டத்தில் கோபாலப்பட்டினம் மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் இருக்கும் குறைகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எந்த மாதிரியான குறைகளை தெரிவிக்கலாம். அதைப்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.தெரு விளக்கு,
2.சாக்கடை கழிவு நீர் சுத்தம் செய்தல்,
3.குளங்களைச் சுற்றி சுத்தம் செய்தல்,
4.தெருக்களுக்கு தேவையான சாலைகள் அமைத்தல்,
5.ஊராட்சிக்கு தேவையான சிறுவர் பூங்கா அமைத்தல்,
6.அனைத்து தெருக்களிலும் குப்பையை சுத்தம் செய்தல்,
7.அனைத்து குளங்களையும் சுற்றி மரங்கள் நடுதல்,
8.ஊராட்சி மூலம் மாதம் ஒருமுறை கொசு மருந்து அடித்தல்,
9.பொதுவான பஸ் ஸ்டாப் மற்றும் மீன் மார்க்கெட் இடங்களில் கழிப்பறை அமைத்தல்,
10.அனைத்து தெருக்களில் உள்ள கருவை மரங்களை அகற்றுதல்,
11.கோடைக்காலங்களில் ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது அதற்கு போர்வெல் அமைத்தல்
பொதுமக்களிடம் கிராமசபை கூட்டம் சம்பந்தமாக போதிய விழிப்புணர்வு இல்லை ஆகையால் பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்திற்கு சென்று தங்கள் குறைகளை கண்டிப்பாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏனென்றால் அரசாங்கத்தின் மூலம் கிராம சபைக் கூட்டத்திற்கு பல லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது ஒவ்வொரு ஊராட்சிக்கும்.
இதனுடைய முக்கிய சிறப்பம்சங்கள் கிராமசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கண்டிப்பாக நிறைவேற்றி தர வேண்டும் என்பது சட்டம்..
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:
கோபாலப்பட்டிணம்
கணபதிப்பட்டிணம்
குறிச்சிவயல்
முத்துக்குடா(மீனவர்)
நாட்டாணி
ஆர்.புதுப்பட்டிணம்(மீனவர்)
ஆர்.புதுப்பட்டிணம்(முஸ்லிம்)
முத்துக்குடா(முஸ்லிம்)
அண்டியப்பன்காடு
கூடலூர்
பாதரக்குடி
புரசகுடி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.