எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவின் முதல் நாளான நேற்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஜி துவக்கவுரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு தஞ்சையில் நடைபெற்றது. அக்ரோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன.
முன்னதாக பொதுக்குழுவின் ஒருபகுதியாக அக்.23 அன்று தஞ்சை பி.கே. மஹாலில் மாநில பிரதிநிதிகள் சபை கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழுவிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமைத் தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் அகமது நவவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் ஆண்டறிக்கையையும், மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர் கட்சியின் நிதி அறிக்கையையும் தாக்கல் செய்தனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி, துணைத் தலைவர் தெகலான் பாகவி, பொதுச்செயலாளர் அப்துல் மஜீத், தேசிய செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் பைஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
பொதுக்குழுவின் இரண்டாம் நாளான இன்று, 2021-2024 வரையிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் விவரம் :
மாநில தலைவர் : நெல்லை முபாரக்
மாநில துணைத்தலைவர்கள் : S.M. ரபீக் அஹமது, B. அப்துல் ஹமீது
மாநில பொதுச்செயலாளர்கள் : M. நிஜாம் முகைதீன், அச. உமர் பாரூக், S. அகமது நவவி
மாநில பொருளாளர் : S. அமீர் ஹம்ஸா
மாநில செயலாளர்கள் : T. ரத்தினம், A. அபூபக்கர் சித்தீக், ஏ.கே. கரீம், நஜ்மா பேகம்
இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்(2021-2024) என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை கட்சியின் தேர்தல் அதிகாரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான அப்துல் மஜீத் தனது மேற்பார்வையில் நடத்தினார். மேலும் துணை தேர்தல் அதிகாரியாக கேரள மாநில முன்னாள் தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான அப்துல் மஜீத் ஃபைஸி செயல்பட்டார். நடைபெற்ற தேர்தலின் முடிவில் புதிய மாநில செயற்குழு உறுப்பினர்களும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து புதிய மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகளை இன்று (அக்,24) தஞ்சை பி.கே. அரங்கில் வைத்து நடைபெற்ற பொதுக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வில் காலை 11 மணியளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி அறிவிப்பு செய்தார்.
அதன்படி எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய தமிழ் மாநில தலைவராக நெல்லை முபாரக், துணைத் தலைவர்களாக எஸ்.எம்.ரஃபீக் அகமது, பி.அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்களாக எம்.நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், எஸ்.அகமது நவவி, பொருளாளராக எஸ்.அமீர் ஹம்சா, செயலாளர்களாக டி.ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், அம்ஜத் பாஷா, வி.எம்.அபுதாஹிர், பஷீர் சுல்தான், வழ.ராஜா முகமது, ஷஃபிக் அகமது, சுல்ஃபிகர் அலி, வழ.சஃபியா, ஃபயாஸ் அகமது, ஹஸ்ஸான் இமாம், டாக்டர். ஜமிலுன் நிஷா, முஜிபுர் ரஹ்மான், ராஜா ஹூசைன் ஆகியோர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக டாக்டர். சேக் மீரான் வேலூர், அப்துல் சத்தார் கன்னியாகுமரி, ஜாபர் அலி உஸ்மானி தென்காசி, நூர் ஜியாவுதீன் ராம்நாடு, ஜியாவுதீன் மதுரை, அபுபக்கர் சித்திக் தேனி, முபாரக் திருச்சி, புரோஜ் கடலூர், டாக்டர் ரபீக் பெரம்பலூர், அஸ்கர் பரமக்குடி, ஆதம் வடசென்னை, அசாருதீன் வடசென்னை, முஸ்தபா கோவை, லுக்மான் ஈரோடு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு பெறும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும், தனியார்துறை பணிகளில் இடஒதுக்கீடு, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் மற்றும் ஆபத்து நிறைந்த அணுக்கழிவு மையம் அமைக்கும் திட்டத்தை ரத்து வேண்டும், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டுவர வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சமவாய்ப்பு ஆணையம் ஏற்படுத்த வேண்டும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த வேண்டும், மின்னணு வாக்கு இயந்திரத்தை விடுத்து வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலங்களான பள்ளிவாசல், தேவாலயம் கட்டும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும், இளைஞர்களை போதையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் காட்டக் கூடாது, வக்ஃப் சொத்துக்களை மீட்டு முஸ்லிம்கள் பலன் பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், மனித உரிமைக்கு எதிரான யு.ஏ.பி.ஏ. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், என்.ஐ.ஏ.வை கலைக்க வேண்டும், தமிழக அகதிகள் முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையின் அடாவடி தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும், டி.என்.பி.எஸ்.சி. மீதான நம்பிக்கையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நவம்பர் 01 ‘தமிழ்நாடு நாளை’ அரசு விடுமுறை தினமாக அறிவித்து அரசே சிறப்பாக கொண்டாட வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களை அதிகமாக்க வேண்டும், சிஏஏ, ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் போராட்ட வழக்குகளை முழுவதும் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.