8-ம் வகுப்பு தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளது.

இதில் தேர்வெழுத உள்ள தேர்வர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணல் மேல்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டையில் ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வருகிற 11-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை (14 முதல் 17-ந் தேதி வரை விடுமுறை நாட்கள் நீங்கலாக) நேரில் சென்று இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் வருகிற 20-ந் தேதி தட்கல் திட்டத்தில் ரூ.500 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175 சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம். தட்கலில் விண்ணப்பித்த தேர்வர்கள் தட்கல் விண்ணப்ப கட்டணத்தொகை ரூ.675 செலுத்த வேண்டும்.

தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

மேலும் இத்தேர்விற்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் பிச்சை முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments