புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைந்து நிரம்பும் ஏரிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பே கல்லணைக் கால்வாய் பாசன பகுதியில் பெரும்பாலான ஏரிகள் விரைந்து நிரம்பியுள்ளன.இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாய் மூலம் வரும் காவிரி நீர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 170 ஏரி, கண்மாய் களில் தேக்கிவைத்து 21 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனம் செய்யப்பட்டு வருகிறது.

கோடை சாகுபடிக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலும் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடைக்கு தண்ணீர் வராது என்பதால், சம்பா சாகுபடியை மட்டுமே இப்பகுதி விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

தற்போது, கல்லணைக் கால்வாய் பாசன பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலான பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. நாற்று மூலம் நடவு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்னதாகவே இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரி, கண்மாய்கள் நிரம்பியுள்ளதால், சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் கல்லணைக் கால்வாய் பிரிவு உதவிப் பொறியாளர் கூறி யது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். அதில், அறந்தாங்கி வட்டத்தில் 77, மணமேல்குடியில் 53, ஆவுடையார்கோவில், கறம்பக்குடியில் தலா 19, ஆலங் குடியில் 2 என மொத்தம் 170 ஏரி மற்றும் கண்மாய்களில் காவிரி நீரை தேக்கிவைத்து, 21 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய் யப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த 1 வாரத் தில் பெய்த மழை மற்றும் பிற பகுதியில் இருந்து வந்த தண்ணீர் மூலம் 78 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 21 ஏரிகள் 90 சதவீதமும், 42 ஏரிகள் 80 சதவீத மும், 29 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி உள்ளன.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்னதாகவே ஏரி, கண்மாய்கள் விரைந்து நிரம்பி வருவதால், விவசாயிகள் உற்சாகத்துடன் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, வரக்கூடிய நாட்க ளில் பெய்யும் மழைநீருடன், தேவைப்படும் இடங்களுக்கு காவிரி நீரைக் கொண்டும் நீர்நிலை களில் குறைவில்லாமல் தேக்கி, சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன்மூலம் நடப்பாண்டு தண் ணீர் பற்றாக்குறையால் சாகுபடி பாதிப்பு ஏற்படாது. மேலும், நீர் நிலைகளின் கரைகள், மதகுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதிருக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments