புதுக்கோட்டை மாவட்டத்தில் தாலுகாக்களில் பட்டா தொடர்பான சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தகவல்!



தமிழக அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வண்ணமாகவும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான மனுக்கள் பெற்று தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தி பொங்கல் 2022க்குள்ளாக பொது மக்களின் குறைகளை முழுமையாக களைந்திட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு தாலுகாக்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம் நடத்தப்படும் நாள், வருவாய் கிராமம் (ம) இடம், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களால் முன்கூட்டியே விளம்பரப்படுத்தப்படும். 

பொதுமக்கள் தங்களது நிலங்களுக்கான பட்டா தொடர்பான பிரச்சனைகளான கணினியில் புலஎண்கள் திருத்தம், உட்பிரிவு எண்கள் திருத்தம், பரப்பு திருத்தம், பட்டாதாரர்களின் பெயர்கள் மற்றும் தந்தைஃபாதுகாவலர் பெயர்கள் திருத்தம், உறவுமுறை திருத்தம், பட்டாவில் சில குறிப்புகலங்களில் காலியாக விடப்பட்டுள்ளமைக்கான திருத்தங்கள், பிற அருகாமையில் உள்ள பட்டாதாரர்களின் பெயர்கள் தங்களது பட்டாவில் இடம்பெற்றுள்ளமைக்கான திருத்தங்கள் போன்றவற்றுக்காக பொதுமக்கள் இச்சிறப்பு முகாம்களில் நேரடியாக, உரிய ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments