அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்வு!



புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனை இருந்தது. புதுக்கோட்டையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. இதனால் பழைய அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியுடன் இணைந்தது.

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையை தற்போது மீண்டும் முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய ராணியார் அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட தொடங்கி பயன்பாட்டில் உள்ளது. மருத்துவ வசதிக்காக தாலுகா அளவிலும் அரசு மருத்துவமனைகள், கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

பொதுவாக மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட பின் ஒரு மாவட்டத்தில் தாலுகாவில் உள்ள பெரிய மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது உண்டு. அந்தவகையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயருகிறது. இதற்கான முதற்கட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மருத்துவ துறை வட்டாரத்தினர் கூறுகையில், அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முதல்கட்டமாக மேற்கொள்ளப்படும். தரம் உயர்ந்த பின் மருத்துவமனையில் சிகிச்சை வசதிகள் கூடுதலாக அதிகரிக்கும். டாக்டர்கள், செவிலியர்கள் கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். சிகிச்சை பிரிவுகளும் அதிகப்படுத்தப்படும். 

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்புவது நிறுத்தப்படும். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்ந்த பின் அனைத்து விதமான சிகிச்சைகளும் பொதுமக்களுக்கு அங்கேயே கிடைக்கும் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments