தொண்டியில் த.மு.மு.க. சார்பில் நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாம்

தொண்டியில் த.மு.மு.க. சார்பில்  மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது

தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து மாபெரும் சர்க்கரை நோயாளிக்கான இலவச கண் விழித்திரை முகாம் மற்றும் முழுமையான சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம் தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில், தொண்டி வடக்குத்தெரு கே எஸ் கே மஹாலில் நடைப்பெற்றது. இம் முகாமை திருவாடனை வட்டாட்சியர் தொடங்கி வைத்தார். தமுமுக தொண்டி பேரூர் தலைவர் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர்கள் தொண்டி சாதிக் பாட்சா, சலி முல்லா கான் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தொண்டரணி மத்திய மண்டல செயலாளர் நசீர் ,ராமநாதபுரம் மத்திய மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் முகமது அலி உபைதுல்லா மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சுலைமான் சகோதரர் தமீம், ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் பகுருல்லாஹ், இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் அன்சாரி விவசாய அணி செயலாளர் ரைசுல் இஸ்லாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொண்டி ஐக்கிய ஜமாத்தின் தலைவர் ஹிப்பத்துல்லாஹ் வடக்கு தெரு ஜமாத் தலைவர்  ,சாகுல் ஹமீது, செயல் அலுவலர் செய்யது அலி பெரியபள்ளி பைத்துல்மால் தலைவர் அஸ்கர், சுலைமான்  இந்து தர்ம பரிபாலன சபை துணை தலைவர் ராஜா ,ஜிம்ஆனந்தன் காங்கிரஸ் தலைவர் காத்தராஜா திமுக இஸ்மத் நானா வர்த்தக சங்க நிர்வாகிகள் சாதிக் ஹாஜி, இளவரசி நவாஸ் .வணிகர் சங்க நிர்வாகிகள் இனாமல் அக்பர் அலி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 300 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இதில் கண்டறியப்பட்ட 60க்கும் மேற்பட்ட கண் பிரச்சினை உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டனர்.

ஆரோக்கிய மருத்துவமனை சார்பில் டாக்டர் பரணிகுமார்  தலைமையில் டாக்டர் செவிலியர்கள் ஒரு மருத்துவ சிகிச்சைக் குழுவும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கினைப்பாளர் ராஜசேகர் தலைமையிலான டாக்டர்கள் செவிலியர்கள் குழுவும் பொது மக்களுக்கு சிகிச்சை வழங்கினார்கள் .

இம் முகாமிற்கான ஏற்பாடுகளை தொண்டி பேருர் தலைவர் காதர்,  திருவாடனை ஒன்றிய தலைவர் பீர்முஹம்மது, மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் தொண்டி ராஜ், தமுமுக தொண்டி பேரூர் செயலாளர் சம்சுதீன், பொருளாளர் மைதீன், ம ம க தொண்டி பேரூர் செயலாளர் பரக்கத் அலி, தமுமுக துணைச் செயலாளர் ஹம்மாது  ஜாஸ் அப்துல்லாஹ் அப்துல் ரசாக்  நிசார் மற்றும் தமுமுக மமக நிர்வாகிகள்  ஏற்பாடுகள் செய்திருந்தனர்.  தமுமுக செயலாளர் சம்சுதின் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments