வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை


வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர்  ஆகிய எட்டு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். அதேபோல், புதுச்சேரி மாநிலத்தில், காரைக்கால் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, அம்மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  (30.10.2021) சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை'' என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments