மீமிசல் அருகே ஆலத்தூரில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி ஆலோசனைக் கூட்டம்!மீமிசல் அருகே ஆலத்தூரில் கொரானா தடுப்பூசி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஊராட்சி ஆலத்தூர் கிராமத்தில் உள்ள பல்நோக்கு பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் கொரானா தடுப்பூசி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் வெள்ளைச்சாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் பி. பெரியசாமி, வட்டார மருத்துவ அலுவலா் ராமச்சந்திரதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொண்ணமங்கலம், நாட்டாணிபுரசகுடி, மீமிசல், புத்தாம்பூர், திருப்புனவாசல் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வரும் அக். 10 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments