நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி அலட்சியம்: கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதில் உயிர் பலி கேட்கும் சாக்கடைகள்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு, தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லை. இதனால் தெருவெங்கும் கழிவுநீர் பாய்ந்தோடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

தற்போது பருவமழை தொடங்கியிருக்கும் இவ்வேளையில், இதுபோன்று சாலைகளில் கழிவு நீர் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல தெருக்களிலும் சாக்கடை நீர் தேங்கி உள்ளது.தெருக்களிலிருந்து பிரியும் குறுக்கு தெருக்களிலும் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை கிராமத்தின் சுகாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது, “தெருவில் சாக்கடை ஓடுவதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில்தான் அதிகளவிலான மக்கள் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மேலும் 11 வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். எனவே இது போன்று உயிர் பலிகள் இனிமேல் நடக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை தேவை. தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டி ஊராட்சி மன்ற தலைவியிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊராட்சி மன்ற தலைவி நோய் வந்தவுடன் இந்த கிராமத்தை எட்டி பார்க்காமல் நோய் வருவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்” என்றார்.
பயனற்று கிடக்கும் கழிவுநீர் கால்வாயை தூர்வாரக்கோரியும் அவுலியாநகரில் சுனாமி வீடு கட்டப்பட்டுள்ள ஆறு வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளுக்கு முறையான கால்வாய் வசதி அமைத்துதர கோரிக்கை 

இந்த கோரிக்கைகள் பற்றி அவுலியாநகர் பொதுமக்கள் கூறுவதாவது:

"புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் அவுலியாநகர் தெருவில் நாங்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் மீனவர்கள். எங்கள் பகுதியில் சுனாமி வீடுகட்டப்பட்டுள்ள ஆறு வீதிகளும் எப்பொழுதுமே சாக்கடைகள் சூழ்ந்துதான் காணப்படுகிறது. அதுவும் பருவமழை காலங்களில் மழை தண்ணீர் ஓட வழியில்லாமல் மழைநீர் மற்றும் கழிவுநீர் கலந்து தெருக்களை சூழ்ந்து கொள்கின்றன. எங்களுடைய தெருக்களுக்கு முறையான கால்வாய் வசதி இல்லை. நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியிலேயே கழிவுநீர் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள்தான். எங்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்பு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அதனடிப்படையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என கூறினார். அதனடிப்படையில் மூன்று தெருவிற்கு மட்டும் பேவர் பிளாக் சாலை போடப்பட்டது. ஆனால் அவை தரமற்றதாக அமைக்கப்பட்டதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் புதிய சாலையில் நடந்து செல்லும் பொழுது ஒருசில இடங்களில் பேவர் பிளாக் கல் உள்ளே சென்று பள்ளம் ஏற்படுவதால் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்படும் நிலை உள்ளது. வாகனங்களோ செல்ல முடியாத நிலையில் உள்ளது.
மேலும் தற்போது மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பருவமழை முன்னெச்சரிக்கையாக போர்க்கால அடிப்படையில் அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி புணரமைப்பு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் இங்கு கழிவுநீர் கால்வாயை தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி டெங்கு கொசு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கடலில் கலப்பதற்கு வழி வகை செய்யுமாறும் அதே போன்று ஆறுவீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் உள்ள கழிவுநீர் அந்த கால்வாயில் வந்து சேர்வதற்கு வழிவகை செய்யுமாறும்  கேட்டுக்கொள்கின்றோம்.

உயிர் பலி ஏற்படும் வரை காத்திராமல் சுகாதார சீர்கேட்டினால் உயிர்பலிகள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments