தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் இதய துடிப்பு சரி செய்ய நவீன கருவி அறிமுகம்! முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை!!



இதயம் சீரற்ற முறையில் துடித்தல் அல்லது வழக்கதை விட வேகமாக துடித்தல் உள்ளிட்ட பிரச்சினையை சரி செய்ய கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் கிரையோஅபலேசன் எனும் நவீன கருவி அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி மருத்துவமனை அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் நவீன கருவியை அறிமுகப்படுத்தி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறியதாவது:-

சிலருக்கு வழக்கத்தை விட அதிக வேகத்தில் இதயம் துடிக்கும். இவர்களுக்கு மயக்கம், தலைசுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க வேண்டும். 

இதுபோன்ற நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் கிரையோ அபலேசன் எனும் நவீன கருவி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சிகிச்சையை தமிழக முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாங்கள் மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதில் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் இதய டாக்டர் தாமஸ் அலக்சாண்டர், சிறப்பு டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ், ஜெர்மனி டாக்டர் சிபு மேத்யூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments