இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான மீனவர் குடும்பத்திற்கு எம்.பி நவாஸ் கனி, எம்.எல்.ஏ. சின்னதுரை ஆறுதல்!கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 3 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கடலில் மூழ்கியது. இதில் 2 பேர் மட்டும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராஜ்கிரண் என்ற மீனவர் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து மீனவர் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும், 2 மீனவர்களை அழைத்து வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்துகொண்டு மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று உறுதியளித்தார். 

கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. சின்னதுரை உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுவேன் என்று கூறினார். இறந்த ராஜ்கிரண் வீட்டிற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி சென்று ராஜ்கிரண் மனைவி மற்றும் தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் மீனவர்களிடையே பேசுகையில், மீனவரின் உடல் மற்றும் 2 மீனவர்களையும் தமிழகம் கொண்டுவர அரசு அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments