கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் அவதி! விரைவில் விடியல் பெரும் மக்கள்!!கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் கடந்த 04 அக்டோபர் அன்று புதிய டிரான்ஸ்பாரம்‌ அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விரைவில் வேலைகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மின்வாரியத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
இதைப்பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் அவுலியாநகர் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரமே பல வருடமாக இருந்து வந்தது.

இதைப்பற்றி சென்ற ஆட்சியில் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஏழை மீனவ மக்களின் சிரமத்தை அறிந்த தற்போதுள்ள அரசு பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே எங்களுக்கு இந்த புதிய டிரான்ஸ்பாரத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. இதனால் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

அவுலியா நகர் புதிய டிரான்ஸ்பாரம் அமைப்பதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்கள், கொடிக்குளம் உதவி மின்பொறியாளர் அவர்கள், லைன்மேன் தாஸ் அவர்கள், கோபாலப்பட்டிணம் ஊர் ஜமாத் நிர்வாகிகள், மீமிசல் ஒன்றிய கவுன்சிலர் திரு பெ.ரமேஷ் அவர்கள், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற துனைத்தலைவர் திரு உதயம் J.தாஹீர் அவர்கள், 2-வது வார்டு உறுப்பினர் EM.சித்தி நிஜாமியா அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் அவுலியா நகர் பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் திறப்பு விழாவுடன் பயன்பாட்டுக்கு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments