அறந்தாங்கி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் இரும்பு குழாய்களுக்கிடையே சிக்கிய பெண்ணின் கால்கள் தீயணைப்பு துறையினர் போராடி மீட்பு

அறந்தாங்கி அரசு மருத்துவமனை வாயிலில் மாடுகள் மருத்துவமனைக்குள் நுழையாமல் இருக்க அமைக்கப்பட்ட இரும்பு குழாய்களுக்கு இடையே சிக்கிய பெண்ணை தீய ணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் மீட்டனர்.

அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மாடுகள் வருவதை தடுக்க மருத்துவமனை நுழைவு வாயிலின் வழியில் சிறிய இடைவெளியுடன் இரும்பு குழாய்கள் பொறுத்தப்பட்டு வழி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இரும்பு குழாய்கள் மீது வாகனங்கள் சென்று வருவதால், குழாய்களுக்கிடையே இடைவெளி அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்குசென்றொரு பெண்ணின் கால் இரும்பு குழாய்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. அவர் எவ்வளவோ முயன்றும் காலை வெளியே எடுக்க முடியவில்லை.

உடனே அக்கம்பக்கத் தில் உள்ளவர்கள் இச்சம்ப வம் குறித்து அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை யினர் விரைந்து சென்று,குழாய்களை வளைத்து இடைவெளியை அதிகரித்து குழாய்களுக்கு இடையின் சிக்கிய பெண்ணை காயமின்றி மீட்டனர்.

அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் மருத்துவமனை நிர்வாகம் நுழைவு வாயிலில் அமைக் கப்பட்டுள்ள இரும்பு குழாய்களை முறையாக சீரமைத்து பொதுமக்களின் கால்கள் அந்த குழாய்களுக்கு இடையே சிக்காத வகையில் அமைக்க வேண்டும் என பொது மக்களும் நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments