சவூதியில் இறந்தவரின் உடல் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியால் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு





சவூதியில் இறந்தவரின் உடல் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியால் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு.

சவூதி அரேபியா அல்அஹ்சா பகுதியில் வேலை செய்து வந்த புதுக்கோட்டை (மேற்கு) மாவட்டம் ஆலங்குடி தாலுகா சேந்தாக்கு வட்டம் குளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா இவரது மகன் பழனிசாமி (52) ஆவார். இவரது மனைவி பெயர் பாக்கியம் இவர்களுக்கு இரண்டு திருமண முடிந்த மகள்கள் உள்ளனர். பழனிச்சாமி பல வருடங்களாக சவுதி தம்மாம் கிழக்கு மாகாண பகுதியில் பணிபுரிந்து வந்த நிலையில் விபத்தில் காயமடைந்து கடந்த‌ மாதம் மரணமடைந்தார். 

வெளிநாட்டில் மரணமடைந்த தனது அப்பாவின் உடலை ஊருக்கு கொண்டு வர உதவுமாறு அவருடைய உறவினர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். உடனே எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் தம்மாம் கிழக்கு மாகாணம் இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகளான அல்அஹ்சா பகுதி தலைவர் ஜின்னா மற்றும் செயலாளர் ரியாஸ் தொடர்பு கொண்டு உதவி செய்யும்மாறு கேட்டு கொண்டனர்.

சோசியல் ஃபோரம் நிர்வாகி ஜின்னாஹ் எடுத்த தொடர் முயற்சியின் பலனாகவும் இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த பழனிசாமி உடலை தாயகத்திற்கு 2021 அக்டோபர் 4ஆம் தேதி திருச்சி நோக்கி வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர். திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகளான  மாவட்ட பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி, மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத், பொருளாளர் சுஹைபு, டோல்கேட் கிளை தலைவர் PKM பாஷா மற்றும் செயலாளர்  அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சி கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஜெ.சாகுல் ஹமீது, மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் சலாவுதீன் ஆகியோர் இன்று காலை 9-30 மணியளவில் அக்டோபர் 5ஆம் தேதி திருச்சி விமான நிலையம் விமானத்தில்  இறந்த பழனிச்சாமியின் உடலை பெற்று SDPI கட்சியின் ஆம்புலன்ஸ் உதவியோடு அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவரின் உடலை குடும்பத்தாரிடம்  ஒப்படைத்தனர்.
 
துரிதமாக செயல்பட்டு இறந்த உடலை தாயகம் அனுப்ப உதவி செய்த இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நிர்வாகிகளுக்கும், SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கும் பழனிசாமி அவர்களின் குடும்பத்தார் தங்களது நன்றியினை தெரிவித்தார்கள்.

தகவல்:
சமூக ஊடக அணி
திருச்சி மாவட்டம்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments