சீமானையும், கமலஹாசனையும் கண்டித்து புதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு எதிராக கிண்டலும், கேலியுமாக கருத்து வெளியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி சீமானையும், மக்கள் நீதி மையம் கமலஹாசனையும் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை தாங்கினார். போராட்டத்தை தொடங்கி வைத்த சங்கத்தின் மாநில செயலாளரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை உரையாற்றினார். மாநில பொருளாளர் எஸ்.சங்கர் நிறைவுரையாற்றினார்.

கோரிக்கைகளை விளக்கி வி.தொ.ச. மாவட்ட துணைத் தலைவர் எம். சண்முகம். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி. ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பேசினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments