மணமேல்குடி, ஆவுடையார்கோவிலில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    
கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணமேல்குடி தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் சி.பி.எஸ். (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ரத்து செய்ய கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணைத்தலைவர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பால்ராஜ், சேக்முகமது, இளையராஜா, பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யகூடாது என்று கோஷம் எழுப்பினர். 

இதேபோல் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அர்சசுணன் வேத செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் அர்ச்சுணன், மாநில பொதுச்செயலாளர் யாக்கோப், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க துணைத்தலைவர் ஜபருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments