கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்!கோட்டைப்பட்டினத்தில் உபரி நீர் வெளியேற பெரிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்வதால் வாய்க்காலுக்கு மேலே பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாய்க்காலில் இருபுறமும் செடி கொடிகள் மண்டி புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் இதன் வழியாக தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த புதர் போல் மண்டி இருக்கும் செடிகொடிகளை அகற்றியும், வாய்க்காலை தூர்வாரி தரவேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கையின் படி, அந்த வாய்க்கால் தூர்வாரும் பணி ஊராட்சி மூலம் தொடங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments