அறந்தாங்கி ரோட்டராக்ட் சார்பில் அரசு கல்லூரியில் மரக்கன்று நடும் விழா!



விடியல் அறந்தாங்கி ரோட்டராக்ட் சங்கத்தின் சார்பாக அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் கல்லூரிக்கு 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முகமது பருக் தலைமை தாங்கினார். கட்டிட பொறியியல் துறையின் தலைவர் குமார், இயந்திரவியல் துறை தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கணினி பொறியியல் துறை தலைவர் சுமதி கணேசன், விடியல் அறந்தாங்கி ரோட்டராக்ட் சங்கத்தின் தலைவர் சக்திவேல் மரக்கன்றுகளை நட்டு துவங்கி வைத்தார். முன்னதாக திட்ட தலைவர்  ஹரிஹரன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் பெண்கள் மேம்பாட்டு தலைவர் பாரதி நன்றி கூறினார். இரத்ததான இயக்குனர் தாமோதரன், மாணவர் மேம்பாட்டு தலைவர் கௌதம சோழன் உள்ளிட்ட ரோட்டராக்ட் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments