புதுக்கோட்டையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது!புதுக்கோட்டையில் சட்டவிரோத போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை நகர் பகுதிகள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களையும் அதனைப் பயன்படுத்துவோர்களையும் கண்டறிந்து கைது செய்ய எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவிட்டதன் பேரில் நகரத்தில் உள்ள மூன்று காவல் நிலையங்களுக்கு உட்பட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த தனசேகர், சக்திவேல், ஹக்கீம் ஆகிய மூன்று இளைஞர்கள் போதை மாத்திரைகளைப் பயன்படுத்தி வந்ததோடு அதை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த மூவரையும் கைது செய்த திருக்கோகர்ணம் போலீசார் அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் குற்றவாளிகள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் வேறு யாரேனும் இதுபோல் போதை மாத்திரை விற்பனை செய்கிறார்களா என்பது குறித்தும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments