கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ!



கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் நீண்ட நாள்களாக லோ வோல்டேஜ் எனப்படும் குறைந்த மின்னழுத்த காரணமாக கிராம மக்கள் அடிக்கடி மின்சாரம் தடைபட்டு அவதிப்பட்டு வந்தனர்.ஆகையால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் அவுலியா நகர் பகுதியில் சில தினங்களுக்கு முன் அமைக்கப்பட்ட 63KV புதிய டிரான்ஸ்பார்மர் நேற்று 07.10.2021 அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைக்க புதிய டிரான்ஸ்பார்மர் செயல்பாட்டிற்கு வந்தது.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, துணைத்தலைவர் அபுதாஹீர், கவுன்சிலர் அய்யா ரமேஷ், கொடிக்குளம் உதவி பொறியாளர், வார்டு உறுப்பினர்கள், வயர்மேன் தாஸ்,அரசு அதிகாரிகள், ஊர் ஜமாத்தார்கள், அரசியல் கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவுலியா நகர் பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று சாக்கடையால் சூழ்ந்துள்ள தெருக்களை நேரிடையாக சென்று பார்வையிட்டார். மேலும் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

அவுலியா நகர் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்த ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் K.நவாஸ் கனி அவர்களுக்கும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களுக்கும் மற்றும் பொருளாதார உதவி செய்த ஊர் ஜமாத், கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அவுலியா நகர் பகுதியை சேர்ந்த சிலருக்கும் அவுலியா நகர் பகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.மேலும் புதிய டிரான்ஸ்பார்மர் அமைய அயராது முயற்சிகளை மேற்கொண்ட அவுலியா நகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments