மன்னார் வளைகுடா கடல் பகுதிகளான கீழக்கரையின் முதல் பெரியபட்டினம் கடல் கரையோரங்களில் மீன்கள் இறந்து ஒதுக்குவதால் பகுதி மக்கள் அச்சம்






கீழக்கரையின் முதல் பெரியபட்டினம் கடல் கரையோரங்களில் மீன்கள் இறந்து ஒதுக்குவதால் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்

இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளான கீழக்கரை முதல் பெரியபட்டினம் வரை உள்ள கடற்பகுதிகளில் திடீரென்று கடல்நீர் பச்சை நிறத்திற்கு மாறியதில் மீன்கள் இறந்து தற்போது ஒதுங்கு துவங்கியுள்ளது 

இதனை பகுதியில் உள்ள பொதுமக்கள் மீன்கள் இறந்து ஒதுங்குவது கண்டு  பெரும் அச்சத்தில் உள்ளனர்

மீன்கள் இருப்பதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு

கடலில்  ஏற்படும் காலநிலை மாற்றத்தால் இதுபோன்று மீன்கள் இறக்க நேரிடும் நுண்ணியிர் பாசிகளான நாட்டிலுக்க சிம்டிலம்   வகை பாசிகள் கடலில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் வெப்பம் தாங்காமல்   இதுபோன்று கடல் பச்சை நிறத்திற்கு மாறி மீன்கள் செதில்களில் நுண்ணுயிர் பாசிகள் மாற்றிக் கொள்வதனால் மீன்கள் மூச்சு விட முடியாமல் இறந்து கரை ஒதுங்கும் என தெரிவித்துள்ளனர் இது ஒரு குறிப்பிட்ட கடற்கரை ஓரங்களில் மட்டுமே நடைபெறும் நிகழ்வு என்பதாகும் இது தானாகவே சரியாகிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் மேலும் இறந்து ஒதுங்கும் மீன்களை மீனவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவ்வாறு சாப்பிட்டால் 100 சதவிகித வெப்பத்தில் மீன்களை பாயில் செய்து சாப்பிட வேண்டுமென மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments