மீமிசல் அருகே R.புதுப்பட்டினம் சாலையில் ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை.!!மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலை உப்பளம் R.புதுப்பட்டினம் சாலையில் உள்ள மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உப்பளம் R.புதுப்பட்டினம் செல்லும் சாலையில் வாசிர் காலனி அருகில் உள்ள மின்கம்பம் (https://goo.gl/maps/PXE9GMGvjJU5ABbd9) சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து உயிர் பலி ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. 
பருவமழை தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்று வீசினால் மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. வீடு மற்றும் கடைகள் அருகே உள்ள இந்த மின்கம்பம் விழுந்தால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்கம்பமானது பழுதடைந்து பல மாதங்களாகிவிட்ட நிலையில் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல்: திருமாறன், ஆர்.புதுப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments