கோபாலப்பட்டிணத்தில் இன்று நவ.14 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா கொரோனா இலவச தடுப்பூசி முகாம்!கோபாலப்பட்டிணத்தில் இன்று 14/11/2021 ஞாயிற்றுக்கிழமை இரண்டு இடங்களில் மாபெரும் மெகா கொரோனா இலவச தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

மூன்றாவது அலை நம்மை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாம் மட்டும் இல்லாமல் நம் குடும்ப உறுப்பினர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று 14/11/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

1.கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகம்  
2.கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பள்ளிவாசல் அருகில் உள்ள பால்வாடியில்

எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கோபாலப்பட்டிணம் 100% தடுப்பூசி செலுத்திய கிராம்மாக அறிவிக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு  அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால் பொதுமக்கள் அனைவரும் முகாமில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைவரும் தடுப்பூசி செலுத்த வரும்பொழுது தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள் வரும்போது பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உயிர் கவசம் தடுப்பூசி என்பதை மறவாதீர்!
முகக்கவசம் அணிவோம்! 
சமூக இடைவெளியினை பின்பற்றுவோம்! 
கிருமி நாசினி மூலம் கைகளை சுத்துப்படுத்துவோம்!!

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments