புதுகை அருகே ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்!புதுக்கோட்டை அருகே ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை  நடைபெற்று வருகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் வைத்து கஞ்சா மொத்த வியாபாரம் செய்து வந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 146 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதாக தொடர்ந்து கஞ்சா போதை மருந்து ஊசி உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

இந்நிலையில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில்  வந்த ஆட்டோவை நிறுத்திய காவல்துறையினர் ஆட்டோவில் இருந்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர் தொடர்ந்து ஆட்டோவை சோதனை செய்தபோது ஆட்டோவில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களை திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர்கள் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த சண்முகம் மற்றும் விந்தியா என்பது தெரியவந்தது இருவரும் ஏற்கனவே 146 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் அவர்கள் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments