இலங்கை கடற்படையின் அத்துமீறலால் கடலில் உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் உடல் இன்று தோண்டியெடுப்பு! மறுபிரேத பரிசோதனை!!



இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டு மறு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ராஜ்கிரண் படகின் மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பின்னர் மீனவர் ராஜ்கிரண் உடல் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜ்கிரணின் உறவினர்கள் உடலை பெற்று கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்தனர்.

இந்தநிலையில் மீனவர் ராஜ்கிரண் மனைவி பிருந்தா, தனது கணவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அதனால் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், பிருந்தாவின் கோரிக்கையை ஏற்று இன்று (வியாழக்கிழமை) மணமேல்குடி தாசில்தார் முன்னிலையில் ராஜ்கிரண் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தரவின்படி மணமேல்குடி தாசில்தார் ராஜா முன்னிலையில் இன்று காலை மீனவர் ராஜ்கிரண் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. பின்னர் அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments