கோபாலப்பட்டிணத்தில் இன்று (27-11-2021), நாளையும் (28-11-2021) வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்க்க மற்றும் திருத்த முகாம்






கோபாலப்பட்டிணத்தில் நாளையும் (13-11-2021), நாளை மறுநாளும் (14-11-2021) வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்க்க மற்றும் திருத்த முகாம் நடைபெறுகிறது!!

வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யலாம் என்றும், நவம்பர் மாதம் 13-11-2021, 14-11-2021 ,20-11-2021, 21-11-2021 மற்றும் 27-11-2021 28-11-2021 (சனி, ஞாயிறு) நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2022 ஜனவரி 1ல் 18-வயது பூர்த்தியாவோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்...

நாள்: 27/11/2021 சனிக்கிழமை ,28/11/2021 ஞாயிற்றுக்கிழமை

 நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

 இடம்: ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,கோபாலப்பட்டிணம்

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2

 முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பாஸ்போர்ட்

2.கேஸ் பில்

3.தண்ணீர் வரி ரசீது

4.ரேஷன் அட்டை

5.வங்கி கணக்கு புத்தகம்

6.ஆதார் கார்டு

 வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.10ம் வகுப்பு சான்றிதழ்

2.பிறப்பு சான்றிதழ்

3.பான் கார்டு

4.ஆதார் கார்டு

5.ஓட்டுனர் உரிமம்

6.பாஸ்போர்ட்

7.கிசான் கார்டு

 அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பான் கார்டு

2.ஓட்டுனர் உரிமம்

3.ரேஷன் கார்டு

4.பாஸ்போர்ட்

5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்

6.10ம் வகுப்பு சான்றிதழ்

7.மாணவர் அடையாள அட்டை

8.ஆதார் கார்டு

 வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம், விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து வழங்கவேண்டும்.வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதோர், வாக்காளர் பட்டியல் பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்ய, முகாம் நாளில் விண்ணப்பிக்கலாம்

எந்தெந்த படிவம் எதற்கு?

வாக்காளர் பட்டியில் புதிதாக பெயர்சேர்க்க, படிவம் 6 ; பெயர் நீக்கம் செய்ய படிவம் 7; பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம் 8; ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், புதிய குடியிருப்பு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம் 8ஏ பூர்த்தி செய்து வழங்கவேண்டும்.
www.nvsp.in என்கிற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்கிற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வரும் ஜன., மாதம், வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.சிறப்பு முகாம் நாளில், பொதுமக்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி பதிவு அலுவலர்களை தொடர்புகொண்டு, தங்கள் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ளலாம் ..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments