கோபாலப்பட்டிணம் VIP நகரில் வானிலிருந்து கொட்டிய மீன் மழை: மீனை பிடித்து விளையாடிய சிறுவர்கள்!



கோபாலப்பட்டிணம் VIP நகரில் மீன் மழை பெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் VIP நகர் பகுதியில் நேற்று பெய்த மழையின் போது மழை நீருடன் மீன்களும் விழுந்துள்ளன.அதனை சிறுவர்கள் போட்டி போட்டு பிடித்து பாட்டிலில் அடைத்து விளையாடி வருகின்றனர்.ஒவ்வொரு மீனும் சிறிய அளவிலே காணப்பட்டது.

மீன் மழை பெய்வது அதிசயமான ஒன்றுதான் என்று சுற்றுசூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
"ஆகாயத்தில் அடர்த்தியான மேகங்கள் ஏற்பட்டு நகரும் போது சுழல் காற்று ஏற்படும். அந்த சூழல் காற்று யானையின் தும்பிக்கை போல கீழே இறங்கும். கடல் மற்றும் நீர் நிலை மேல் அந்த சுழல் காற்று ஏற்படும் போது நீரில் உள்ள மீன்கள், தவளைகள் போன்றவைகள் இழுக்கப்பட்டு மேலே அடித்துச் செல்லும். சுழல் காற்றின் சீற்றம் குறையும்போது அதனால் ஈர்க்கப்பட்ட மீன்கள் தரையில் விழுந்து சிதறும்.
அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இது போன்ற மீன் மழை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வது உண்டு. வட மாநிலத்தில் கூட மீன் மழை பெய்து உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments