வடகாடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் சிறையில் அடைப்பு!வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் கிழக்கு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அப்பகுதியில் தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெடுவாசல் கிழக்கு அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த இந்தியன் (வயது 26), மணியரசன் (32), தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆவணம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த உதயபிரகாஷ் (27) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 6 பாக்கெட் (33 கிராம்) கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருமயம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments