சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5000 பரிசு: முழு விவரம்!






சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். 

இதுமட்டும் அல்லாமல், தேசிய அளவில் ஆண்டு தோறும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

சாலை விபத்தில்  பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சாலை விபத்தில் சிக்கி உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. இதனை குறைக்கும் விதமாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

இந்த புதிய திட்டம் அக்டோபர் 15, முதல் மார்ச் 31, 2026 வரை நடைமுறையில் இருக்கும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. இதுமட்டும் அல்லாமல், தேசிய அளவில் ஆண்டு தோறும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசாக வழங்கப்படும்!

ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். சாலை விபத்து நடந்த பின்னர் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவமனையில் தெரிவிப்பர்.  அனைத்து விபத்துகளும் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்கும், ’மாவட்ட அளவிலான மதிப்பீடு குழு’ ஆய்வு செய்யும். இதில் தேர்வு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5000 பரிசு தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யபடும் என்று தமிழக  அரசு குறிப்பிட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments