கோபாலப்பட்டிணத்தில் காலையில் வெயில் மாலையில் கொட்டிய மழை






கோபாலப்பட்டிணத்தில் காலையில் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் மழை கொட்டியது

வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை  உட்பட  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகில் கோபாலப்பட்டிணத்தில் இன்று நவம்பர் 27 சனிக்கிழமை   காலையில் வெயில் வாட்டிய நிலையில் மாலையில்  மதியம் 5 மணிக்கு மேல் வானிலையில் தலைகீழனா மாற்றங்கள் ஏற்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து, இருள் நிறைந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. 
இந்த மழை அரை மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.சாலைகளில் மழை நீர்  ஓடியது பள்ளமான இடங்களில் மழை நீர்  தேங்கியது. 
 
கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல குளிர் நிலவி வருகிறது. இதனால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நவம்பர் 27, 28ஆம் தேதிகளில் குமரிக்கடல் , தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

வரும் நவம்பர் 29ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக, நவம்பர் 29, 30 ஆம் தேதிகளில் அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 1ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments