"ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை" - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!!



ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பண்டிகைக்கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை முதல் 3ஆம் தேதி வரையிலும் பயணிகள் திரும்பி வருவதற்காக வருகிற 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  இதனால் 6 வெவ்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் மாநகர பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் என 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், 044-24749002, 1800 425 6151 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் புகாரை அடுத்து தனியார் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments