கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் ; உயர்கல்வித்துறை உத்தரவு






தமிழ்நாட்டில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இதுவரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அதற்கு முன், மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு பாடங்கனை நினைவூட்டி, உரிய பாட குறிப்புகளை வழங்க வேண்டும் என்றும் இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகளும் முறையாக பின்பற்றுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments