மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகை ரூ.6 ஆயிரமாக உயர்வு; மீனவர்கள் மகிழ்ச்சிமழைக்காலங்களில் வானிலை சீராக செயல்படாததால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் பெரும்பாலும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்.

இந்த காலங்களில் மீன்களின் வரத்து மிகவும் குறைவாக இருக்கும். ஆகையால் மழைக் காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிப்படையும். இதனால் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பாக மீனவர்களுக்கு மழைக்கால நிவாரண (மீன்களின் வரத்து குறைவு காலம்) தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 

இந்நிலையில் மீனவர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதுகுறித்து கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜமால் முஹம்மது என்ற மீனவரிடம் கேட்டபோது, மழைக்கால நிவாரண தொகையை உயர்த்திய தமிழக அரசுக்கு மீனவர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். இதேபோல் தடைக்கால நிவாரண தொகையையும் தமிழக அரசு மீனவர்களுக்கு அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments