புதுக்கோட்டை மாவட்டத்தில் பி.சி., எம்.பி.சி., மாணவா் விடுதிகளில் சேர அழைப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா் விடுதிகளில் தங்கிப் பயில விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதில் பள்ளி விடுதிகளில் 43 மாணவா்கள், 21 மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ விடுதிகளில் 6 மாணவா்களும், 5 மாணவியா்களும் தங்கலாம். இந்த விடுதிகளில் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும். 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும்.

பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடையோா் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமிருந்தோ, அல்லது ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: நவ. 15. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments