மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால்குளம்-நெல் வயலை கடந்து இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் அவலம்
அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் 200 குடும்பங்கள் உள்ளது. இந்த காலனியை சேர்ந்த சின்னையா (வயது 85) என்பவர் உடல் நல குறைவால் நேற்று இறந்தார். இவரது உடலை எடுத்து செல்ல சாலை இல்லாததால் ஆதிதிராவிடர் குடியிருப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு இடையில் உள்ள குளத்தை தாண்டி சிலர் அரசு புரம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து நெல் விவசாயம் செய்து உள்ள நெல் பயிர்களை மிதித்து சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்துள்ளனர். இது குறித்து ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர்கள் கூறுகையில், எங்கள் குடியிருப்பில் யார் இறந்து விட்டாலும் சடலத்தை கொண்டு செல்ல சாலை வசதி இல்லை. மழை காலத்திலும், நெல் பயிரிடும் பருவத்திலும் யாராவது இறந்து விட்டால் நாங்கள் சடலத்தை தூக்கி கொண்டு குளத்தை கடந்தும் நெல் பயிற்களை மிதித்துதான் சடலத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டி அவலநிலை உள்ளது. இது காலம் காலமாய் நடந்து கொண்டே உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்களுக்கு சடலத்தை கொண்டு செல்ல சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments